அடுத்த மாதமே பணியை ராஜினாமா செய்வதாக கூறிய விமானி விபத்தில் பலி

அகமதாபாத்திலிருந்து இலண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில், 274 உயிர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜுன் 14, 2025 - 22:25
அடுத்த மாதமே பணியை ராஜினாமா செய்வதாக கூறிய விமானி விபத்தில் பலி

அகமதாபாத்திலிருந்து இலண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில், 274 உயிர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்த 56 வயதான விமானி சுமீத் சபர்வால் பற்றிய உருக்கமான தகவல் வெளிவந்துள்ளது.

மும்பையில் உள்ள தனது 90 வயது தந்தை புஷ்கராஜுடன் குறித்த விமானி வசித்து வந்த நிலையில், உடல்நலம் குன்றியிருந்த தன் தந்தையை கவனிக்க, அடுத்த மாதமே பணியை ராஜினாமா செய்ய போவதாக, விபத்துக்கு மூன்று நாட்களுக்கு முன்பு தந்தையிடம் உறுதியளித்திருந்தாராம்.

சுமீத்தின் குடும்ப நண்பர் லாண்டே என்பவர், விபத்துக்கு மூன்று நாட்களுக்கு முன்புதான், 'நான் பணியை ராஜினாமா செய்துவிட்டு வந்து முழுநேரமும் உங்களை கவனித்துக்கொள்கிறேன்' என்று தந்தையிடம் சுமீத் உறுதியளித்தார். ஆனால், அதற்குள் இந்தத் துயரம் நடந்துவிட்டது  என்று கூறியுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!