ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்; ரிக்டர் 6.0 அளவில் பதிவு
ஜப்பானில் நேற்று இரவு 8.44 மணிக்கு ரிக்டர் 6.0 அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஜப்பானில் நேற்று இரவு 8.44 மணிக்கு ரிக்டர் 6.0 அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் மையமானது ஜப்பானின் தலைநகர் டோக்கியோவின் வடமேற்கில் சுமார் 208 கி.மீ. தொலைவில், தரைமட்டத்தில் இருந்து 68 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்தது.
இதனை அந்நாட்டின் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜப்பானில் உள்ள புகுஷிமா மாகாணத்தின் கடற்கரை அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும் அங்கு இதுவரை சுனாமி எச்சரிக்கை அறிவிக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.