ஒன்பது மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ஒன்பது மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளில் வசிப்பவர்களுக்கு முன்கூட்டிய மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ஒன்பது மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளில் வசிப்பவர்களுக்கு முன்கூட்டிய மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள நிலச்சரிவு எச்சரிக்கை, இன்று (20) மாலை 4 மணி முதல் நாளை (21) மாலை 4 மணி வரை அமலில் இருக்கும்.