நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி இலங்கையை வந்தடைந்தார்
'கணேமுல்ல சஞ்சீவ' கொலையின் பிரதான சூத்திரதாரி எனக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கடந்த 13 ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்டார்.
புதுக்கடை நீதிமன்றத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட 'கணேமுல்ல சஞ்சீவ' கொலையின் பிரதான சூத்திரதாரி எனக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கடந்த 13 ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட ஐந்து பேரையும் நாட்டுக்கு அழைத்து வருவதற்காக, விசேட அதிரடிப்படையின் (STF) இரு அதிகாரிகள் நேபாளம் சென்றிருந்தனர்.
இந்த நிலையில், இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேக நபர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.