சீன சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் விசா வழங்கும் இந்தியா
சீனர்களுக்கு இந்தியா சுற்றுலா விசா வழங்குவது 5 ஆண்டுகளில் இது முதல்முறையாகும்.

கடந்த 2020ஆம் ஆண்டு சீன குடிமக்களுக்கு இந்திய விசா வழங்குவது நிறுத்தப்பட்ட நிலையில், இன்று (ஜூலை 24) முதல் மீண்டும் சுற்றுலா விசா வழங்கப்படும் என பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
சீனர்களுக்கு இந்தியா சுற்றுலா விசா வழங்குவது 5 ஆண்டுகளில் இது முதல்முறையாகும். இதுகுறித்து பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், “இந்தியாவுக்கான சுற்றுலா விசா பெறுவதற்கு சீன குடிமக்கள் இணையத்தில் விண்ணப்பம் செய்யலாம். பிறகு குறிப்பிட்ட திகதியில் பெய்ஜிங், ஷாங்காய் மற்றும் குவாங்சோவில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையங்களில் தங்கள் பாஸ்போர்ட் மற்றும் தேவையான ஆவணங்களை நேரில் சமர்ப்பிக்கலாம்” என்று கூறியுள்ளது.