35 ரூபாய் வீதம் 30 முட்டைகள் பெறலாம்; வெளியான தகவல்
இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் நாடளாவிய ரீதியில் உள்ள சதொச நிறுவனங்களில் 35 ரூபாய்க்கு விற்பனை.

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் நாடளாவிய ரீதியில் உள்ள சதொச நிறுவனங்களில் 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விலையில் நேற்று(22) முதல் முட்டை விற்பனை செய்யப்படுவதுடன், நுகர்வோர் ஒருவருக்கு முப்பது முட்டை வீதம் வழங்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே 10 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டு சந்தைக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ள அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர், இறக்குமதி செய்யப்பட்ட 15 மில்லியன் முட்டைகள், தர நிர்ணயத்திற்காக அனுப்பப்பட்டு தற்போது சந்தைக்கு விடப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார்.