புதிய மின் இணைப்பு பெறுவோருக்கு வழங்கப்படவுள்ள சலுகை
புதிய மின் இணைப்பு பெறும்போது, தவணை முறையில் கட்டணம் செலுத்தும் வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என, மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

புதிய மின் இணைப்பு பெறும்போது, தவணை முறையில் கட்டணம் செலுத்தும் வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என, மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் அவர் இந்த விடயத்தை இன்று (07) கூறியுள்ளார்.
புதிய மின் இணைப்பு பெறும் போது அறவிடப்படும் கட்டணத்தை தவணை முறையில் செலுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது. அதற்கமைவாக மின் இணைப்பு கட்டணத்தில் 25 சதவீதத்தை முதலில் செலுத்த வேண்டும்.
மீதமுள்ள தொகையை 10 அல்லது 12 தவணைகளில் செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், புதிய மின் இணைப்பு பெறுவதிலும், துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை திரும்பப் பெறுவதிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அதன்படி, மின் இணைப்பை துண்டித்த பிறகு, மின்சாரத்தை மீள பெறுவதற்கான கட்டணம் 3,000 ரூபாயாக இருந்த நிலையில், அதை, 800 ரூபாயாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.