விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையில் திடீரென நுழைந்த நரி; உயிர்தப்பிய 200 பயணிகள்!
இலங்கை - கட்டுநாயக்கவில் இருந்து 200 பயணிகளுடன் பங்களாதேஷ் சென்ற ஃபிட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம், ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் நரி ஒன்று சக்கர அசெம்பிளியில் சிக்கியது. விமானியின் திறமையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு 200 பயணிகளும் பாதுகாப்பாக தப்பினர்.

இலங்கை - கட்டுநாயக்கவில் இருந்து 200 பயணிகளுடன் பங்களாதேஷ் நோக்கிப் பயணித்த ஃபிட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம், தரையிறங்கும் போது சக்கர அசெம்பிளியில் நரி ஒன்று நுழைந்ததால் ஏற்படவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
குறித்த விமானம், தரையிறங்கும் போது ஓடுபாதையில் நரி ஒன்று திடீரென நுழைந்தது. அது கியரில் சிக்கிக் கொண்டது.
எனினும், விமானியின் விரைவான எதிர்வினை மற்றும் தொழில்நுட்பத் திறன் காரணமாக விமானம் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.
இதனையடுத்து தரையில் இருந்த ஊழியர்கள் உடனடியாக நரியை அப்புறப்படுத்தினர்.
இந்தச் சம்பவம், ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் (Hazrat Shahjalal International Airport) வெள்ளிக்கிழமை (10) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தை விமான நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதுடன், 200 பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்து ஒரு பெரிய விபத்தைத் தடுத்த ஒருங்கிணைந்த முயற்சியைப் பாராட்டினர்.