உலகின் மிக வயதான ஒட்டி பிறந்த இரட்டை சகோதரிகள் மரணம்!

உலகின் மிக வயதான ஒட்டி பிறந்த இரட்டை சகோதரிகள் 62 ஆண்டுகள் வாழ்ந்து தற்போது உயிரிழந்திருக்கின்றனர்.

Apr 16, 2024 - 07:48
உலகின் மிக வயதான ஒட்டி பிறந்த இரட்டை சகோதரிகள் மரணம்!

உலகின் மிகவும் வயதான ஒட்டி பிறந்த இரட்டை சகோதரிகள் மரணம் அடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் லோரி மற்றும் டோரி என்கிற ஜார்ஜ். 

62 வயதுடைய இவர்கள் 1961 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் திகதி பென்சில்வேனியா மாகாணத்தில் இரட்டை சகோதரிகளாகப் பிறந்து இருக்கின்றனர். 

பகுதியளவு இணைந்த மண்டை ஓடுகள், முக்கிய ரத்த நாளங்கள் மற்றும் 30 சதவிகித மூளையைப் பகிர்ந்தவாறு பிறந்த இவர்கள் உயிர்பிழைப்பது கடினம் என டாக்டர்கள் அப்போது கூறி இருகின்றனர்.

இருப்பினும் 62 ஆண்டுகள் வாழ்ந்த இவர்கள் உடல்நலப் பிரச்னையால் தற்போது உயிரிழந்திருக்கின்றனர். இருவரும் பட்டப்படிப்பு படித்து வெவ்வேறு துறைகளில் வேலை பார்த்து வந்திருக்கின்றனர். 

மேலும் கடந்த 2007-ம் ஆண்டில் உலகின் மிக வயதான ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்திருக்கின்றனர். 

இவர்களுடைய இறப்புக்கு கின்னஸ் அமைப்பு உட்பட உலக அமைப்புகள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றன. 

இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.