வடக்கில் இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவு தின விழா 

இலங்கை விமானப்படை தனது 73ஆவது வருட நிறைவு விழாவை  எதிரிவரும்  மார்ச் 02ம் திகதி கொண்டாடவுள்ளது. 

Feb 18, 2024 - 10:34
Feb 18, 2024 - 10:35
வடக்கில் இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவு தின விழா 

இலங்கை விமானப்படை தனது 73ஆவது வருட நிறைவு விழாவை  எதிரிவரும்  மார்ச் 02ம் திகதி கொண்டாடவுள்ளது. 

அதன் அடிப்படியில் வடமாகாணத்தை  முன்னிலை படுத்தி  " நட்பின் சிறகுகள் " எனும் விமானப்படை  சமூக சேவை அமைப்பின் ஊடாக  பல்வேறு  சமூக பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கை விமானப்படை தின கொண்டாட்டம் அனைத்து மத சடங்குகளுக்கும்  முன்னுரிமை அளித்து ஆரம்பமாகவுள்ளதுடன்  இந்த வருடமும் விமானப்படை தலைமையகத்தில் விமானப்படையின் மரியாதை அணிவகுப்பு நடைபெறவுள்ளது. 

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி நோக்கங்களுக்கு இணங்க தரமான கல்வி மற்றும் சுற்றாடல் நிலைத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, வட மாகாணங்களில் சமூக அபிவிருத்தித் திட்டங்களில் கவனம் செலுத்தி விமானப்படை தினத்தை கொண்டாட எதிர்பார்க்கப்படுவதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கி அபிவிருத்தி செய்யப்படவுள்ள 73 பாடசாலைகள் இனங்காணப்பட்டு, அந்தப் பாடசாலைகளின் அபிவிருத்திகள் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கான மதிப்பீடு 100 மில்லியன் ஆகும்.

இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு 73000 புத்தகங்கள் பரிசாக வழங்கப்படவுள்ளதுடன் இதற்காக 25 மில்லியன் ரூபாய் செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், "Air Tattoo 2024"  தொழில்நுட்பக் கல்வி கண்காட்சி மற்றும் திருவிழா நிகழ்வுகள்  யாழ்ப்பாணம் முற்றவெளி  மைதானத்தில் எதிர்வரும்  மார்ச் 6ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 

இங்கு இலங்கை விமானப்படையின் விமானங்கள் மற்றும் வளங்களின் கண்காட்சி மற்றும் விமானப்படையின் பணிகள் மற்றும் தொழில்நுட்ப கல்வி பற்றிய விழிப்புணர்வும் இடம்பெறவுள்ளது. 

இதன்போது  பரசூட் சாகசங்கள், இலங்கை விமானப்படையின் விமான சாகசங்கள் மற்றும் விமான கண்காட்சிகள் , விமானப்படை மோப்பநாய்களின்  சாகச நிகழ்வுகள் , பொழுதுபோக்கு நிகழ்வுகள் மற்றும் ட்ரான் விமானங்களின்  நிகழ்வுகள் விளையாட்டு தொகுதிகள் , மற்றும்  தற்காப்புக்கலை  மற்றும் அடிமுறை சண்டை  காட்சிகள் உட்பட இந்திய விமானப்படையின்  ஹெலிகொப்டர் சாகச நிகழ்வுகளும் அடங்கலாக  கலாசர நிகழ்வுகளும்  இரவு நேர இசைநிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது.

விசேடமாக மாணவர்களின் கல்விக்காக பயன்படுத்தக்கூடிய விமானப்படையினர் பயன்படுத்தும் செயலிழந்த விமான இயந்திரம் யாழ். பல்கலைக்கழகத்திற்கு அன்பளிப்பு செய்யப்படவுள்ளது. 

இதனுடன் நாடளாவிய ரீதியில் 73000 மரக்கன்றுகளை விநியோகிக்கும் திட்டமும், இலங்கையின் மிகப் பெரிய சைக்கிள் சவாரியான இலங்கை விமானப்படை " குவன் சைக்கிள் சவாரி " சைக்கிள் ஓட்டப்போட்டியும்   ஐந்து நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வுகளை விமானப்படை விமான பொறியியல் பணிப்பாளர் நாயகமும்  இந்த நிகழ்வின் ஏற்பட்டு குழுவின் தலைவருமான  எயார் வைஸ் மார்ஷல் முதித மஹவத்தகே முன்னிலை வகித்து நடத்துவதோடு  வட மாகாண ஆளுநர் திருமதி பீ எஸ் எம் சார்ள்ஸ் மற்றும் யாழ் வர்த்தக சங்கத்தினரின் ஆதரவும் கிடைக்கப்பெற்றுள்ளது 

அதேசமயம், இந்த சமூகப் சேவை திட்டம்களுக்கான  அனைத்துச் செலவுகளும் இலங்கை அரசின் தலையீடு இல்லாமல்  இடம்பெறுவதோடு  அதற்காக உள்நாட்டிலு ம் வெளிநாட்டிலும் பெரும் பங்களிப்பும்  கிடைக்கப்பெறுவதோடு   இந்த தித்திட்டத்திற்கு   பொதுமக்கள் தொடர்ந்து தங்களது  ஆதரவை  வழங்குமாறு  விமானப்படையினால்   வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. .

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.