காணி உரிமையைப் பெற இப்போதே பதிவு செய்யுங்கள்... அவசரத் தொலைபேசி இலக்கம் அறிவிப்பு

படிவத்தைப் பூர்த்தி செய்தும் இதற்கான பதிவுகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Feb 26, 2024 - 11:11
காணி உரிமையைப் பெற இப்போதே பதிவு செய்யுங்கள்... அவசரத் தொலைபேசி இலக்கம் அறிவிப்பு

“உறுமய” தேசிய வேலைத் திட்டத்தின் ஊடாக மக்கள் தமது காணியின் முழுமையான உரிமையை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கும் நோக்கில் அதற்காக விண்ணப்பிப்பதற்கு அவசரத் தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தினமும் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஜனாதிபதி அலுவலகம், உறுமய தேசிய செயற்பாட்டு அலுவலகம், 1908 என்ற அவசரத் தொலைபேசி இலக்கம் மற்றும் 0114 354600/ 0114 354601 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தமது கோரிக்கைகளைப் பதிவு செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

www.tinyurl.com/urumaya (டிஜிட்டல் விண்ணப்பப் படிவம்) படிவத்தைப் பூர்த்தி செய்தும் இதற்கான பதிவுகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1935 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க நில மேம்பாட்டுக் கட்டளைச் சட்டத்தின் மூலம் விவசாயிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு நிபந்தனைகளுடன் கூடிய  அனுமதிப் பத்திரங்கள் / கொடுப்பனவுப் பத்திரங்கள் உள்ள அரசாங்கக் காணிகளை நிபந்தனைகளின்றி முழுமையான உரிமையை மக்களுக்கு வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 2024 வரவு - செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவாகும்.

இந்த “உறுமய” நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக முழுமையான உரிமையுடைய காணி உறுதிப்பத்திரங்களைப் பெறுவதன் மூலம், குறித்த காணிக்கு புதிய பெறுமதி கிடைப்பதுடன், அவர்களின் உரிமையைப் பாதுகாத்து அவர்களின் குடும்பத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் வாய்ப்பு உருவாகும்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
26-02-2024 

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.