கடன் கட்டுப்பாடுகள் தளர்வு மத்திய வங்கியின் அறிவிப்பு

நாணயக் கொள்கை சபை நேற்று முன்தினம் கூடிய போதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Feb 9, 2024 - 10:47
கடன் கட்டுப்பாடுகள் தளர்வு மத்திய வங்கியின் அறிவிப்பு

வணிக வங்கிகளுக்கு இலங்கை மத்திய வங்கியினால், குறுகிய கால கடன்களை வழங்குவதற்கு அமுல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டுள்ளன.

பெப்ரவரி 16 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாணயக் கொள்கை சபை நேற்று முன்தினம் கூடிய போதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால், கடந்த வருடம் ஜனவரி 16 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில், வணிக வங்கிகளுக்கு குறுகிய கால கடன்களை வழங்குவதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் குறித்த கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம், சந்தையில் வட்டி வீதம் வீழ்ச்சியடையும் வேகம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 


நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...