நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள 15 மில்லியன் முட்டைகள்
இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் மாதிரிகள், பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்த பண்டிகைக் காலத்துக்குத் தேவையான 15 மில்லியன் முட்டைகள் இன்று (17) நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அரச வணிகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் மாதிரிகள், பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதனையடுத்து, குறித்த முட்டைகள் சந்தையில் விநியோகிக்கப்படும் என அதன் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.
அத்துடன், இன்று 10 மில்லியன் முட்டைகள் சதொச நிறுவனத்துக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.