தீபாவளியை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிப்பு
தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான செவ்வாய்க்கிழமை (21)அன்று சில மாகாணங்களின் பாடசாலைக்கு விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான செவ்வாய்க்கிழமை (21)அன்று சில மாகாணங்களின் பாடசாலைக்கு விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகைகள் குறைவாக இருக்கும் எனும் காரணத்தினால் தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்க கிழக்கு மாகாண ஆளுநரினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 21 ஆம் திகதி விடுமுறை வழங்கப்படவுள்ளதாக மத்திய மாகாண ஆளுநரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த நாளுக்கு பதிலாக எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை செயல்பாடுகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.