இன்று மற்றும் நாளை உயர்தரப் பரீட்சை இல்லை.. மாற்று திகதி விரைவில் அறிவிப்பு
மோசமான வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பேரிடர் நிலைமையை அடுத்து, இன்று (27) மற்றும் நாளை (28) க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறாது.
மோசமான வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பேரிடர் நிலைமையை அடுத்து, இன்று (27) மற்றும் நாளை (28) க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக லியனகே தெரிவித்துள்ளார்.
புதிய பரீட்சைத் திகதிகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், அனைத்து மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பிராந்திய சேகரிப்பு மத்திய நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், ஒருங்கிணைப்பு அதிகாரிகள் மற்றும் பரீட்சை நிலையப் பொறுப்பதிகாரிகள் ஆகியோர், பரீட்சை ஒருங்கிணைப்பு மையங்களில் வைக்கப்பட்டுள்ள வினாத்தாள்களின் பாதுகாப்பில் சிறப்புக் கவனம் செலுத்துமாறு வலியுறுத்தி அறிவிக்கப்பட்டுள்ளது.