ட்ரம்ப் இஸ்ரேலுக்குப் 'பொற்காலம்' எனப் புகழாரம்; உயரிய விருதுக்கு பரிந்துரை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேலுக்குப் பயணம் செய்தபோது ஏர் ஃபோர்ஸ் ஒன்னில் (Air Force One) செய்தியாளர்களிடம் "போர் முடிந்துவிட்டது" என்று கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேலுக்குப் பயணம் செய்தபோது ஏர் ஃபோர்ஸ் ஒன்னில் (Air Force One) செய்தியாளர்களிடம் "போர் முடிந்துவிட்டது" என்று கூறினார்.
இஸ்ரேலின் நாடாளுமன்றத்தில் (Knesset) இன்று உரையாற்றிய ட்ரம்ப், இது "ஒரு புதிய மத்திய கிழக்கின் வரலாற்று விடியலின்" ஆரம்பம் என்று பிரகடனம் செய்தார்.
இந்த தருணம் "பயங்கரவாதம் மற்றும் மரணத்தின் சகாப்தத்தின் முடிவாகவும்", இஸ்ரேலுக்கும் மத்திய கிழக்குக்கும் "ஒரு பொற்காலமாக" இருக்கும் என்றும் அவர் கூறினார்.
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu), இந்த அமைதிக்கு உதவியதற்காக ட்ரம்ப்பை இஸ்ரேலின் உயரிய விருதான இஸ்ரேல் பரிசிற்கு (Israel Prize) பரிந்துரைத்தார்.
ட்ரம்ப் நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருந்தபோது, 'பாலஸ்தீனத்தை அங்கீகரி' ('recognise Palestine') என்ற பதாகையை ஏந்திய இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் (Hadash-Ta’al MKs) வெளியேற்றப்பட்டனர்.