கனேடியர்களின் நிலைமைக்கு புலம்பெயர்ந்தோரை காரணம் காட்டும் அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடாவின் கொள்கைகளை தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், தற்போது அமெரிக்க துணை ஜனாதிபதி JD வேன்ஸும் அதே கோணத்தில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். கனேடியர்களின்

நவம்பர் 22, 2025 - 23:57
கனேடியர்களின் நிலைமைக்கு புலம்பெயர்ந்தோரை காரணம் காட்டும் அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடாவின் கொள்கைகளை தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், தற்போது அமெரிக்க துணை ஜனாதிபதி JD வேன்ஸும் அதே கோணத்தில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். கனேடியர்களின் வாழ்க்கைத்தரம் மேம்படாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் புலம்பெயர்ந்தோர்கள் என அவர் குறிப்பிடுகிறார்.

சமூக ஊடகமான X தளத்தில் பல பதிவுகள் வெளியிட்ட வேன்ஸ், கனடாவில் வெளிநாட்டில் பிறந்தவர்கள் அதிக அளவில் வாழ்வதே அந்நாட்டு மக்கள் வாழ்க்கைத்தரத்தில் தேக்கம் ஏற்பட காரணம் எனக் கூறினார். தனது வாதத்திற்கு ஆதாரமாக, ஒருவருக்கு சராசரியான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP Per Capita) தரவையும் இணைத்தார்.

ஆனால், வாழ்க்கைத்தரத்தை அளவிட GDP மட்டுமே போதுமான காரணிகருதப்படுமா என்று ஊடகங்கள் சந்தேகம் எழுப்பியுள்ளன. அதே நேரத்தில், வேன்ஸ் தனது மற்றொரு பதிவில், “கனடா அரசியல் அமெரிக்க அரசியலையே அதிகமாக கவனிக்கிறது. உங்கள் வாழ்க்கைத் தரம் முன்னேறாததற்கு காரணம் ட்ரம்ப் அல்ல; நீங்கள் தேர்ந்தெடுத்த தலைவர்களே” என குறிப்பிட்டார்.

ஏற்கனவே கனடா குடியேற்றக் கொள்கைகளில் கட்டுப்பாடுகளை அதிகரித்து வரும் சூழலில், வேன்ஸின் இந்த கருத்துக்கள் விவாதத்தை மேலும் தூண்டியுள்ளன.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!