தங்கம் அவுன்ஸ் விலை $4,000ஐ தாண்டி வரலாற்று சாதனை!
தங்கம் ஒரு அவுன்ஸின் விலை $4,000ஐ தாண்டி நேற்று வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்க அரசாங்க முடக்கம் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற நிலையே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான புகலிடங்களைத் தேடக் காரணம்.

அமெரிக்க அரசாங்கம் முடக்கப்பட்டமை மற்றும் பொருளாதாரம் குறித்த பரவலான நிச்சயமற்ற நிலை காரணமாக, முதலீட்டாளர்கள் தங்கள் பணத்திற்குப் பாதுகாப்பான புகலிடங்களைத் தேடுவதைத் தொடர்வதால் இந்த விலை அதிகரித்துள்ளது.
கவலையுள்ள முதலீட்டாளர்கள் குழப்பமான அல்லது நிச்சயமற்ற காலங்களில் பாதுகாப்பான முதலீடுகளை நாடும்போது தங்கத்தின் விற்பனை கணிசமாக உயரலாம்.
இன்று காலை 9.10 மணி நிலவரப்படி, நியூயார்க்கில் தங்க விலைகள் $4,003 ஆக வர்த்தகம் செய்யப்பட்டன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த தொடர்ச்சியான வரிகளால் உலகப் பொருளாதாரம் பெரிதும் சீர்குலைக்கப்பட்ட நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி போன்ற பிற உலோகங்கள் பரந்த அளவில் இலாபங்களைப் பெற்றுள்ளன.