பாண் விலை எகிறியது... மக்கள் கடும் விசனம்
ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள், 10 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த சங்கம் அறிவித்துள்ளது.

கோதுமை மா விலை அதிகரிப்பை அடுத்து, 450 கிராம் நிறைகொண்ட ஒரு இறாத்தல் பாணின் விலை, 30 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை, ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள், 10 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த சங்கம் அறிவித்துள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பால் பல்வேறு பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்து வருவதால் மக்கள் தாம் அதிக சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாக விசனம் வெளியிட்டுள்ளனர்.