சனி பகவானின் நட்சத்திரத்திற்கு சூரியன் செல்வதால் 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட்!
நவகிரகங்கள் அவ்வப்போது ராசியை மட்டுமின்றி, நட்சத்திரங்களையும் மாற்றும். அவ்வாறு கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

நவகிரகங்கள் அவ்வப்போது ராசியை மட்டுமின்றி, நட்சத்திரங்களையும் மாற்றும். அவ்வாறு கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் தற்போது கடக ராசியில் பயணித்து வருகிறார். சூரியன் ஜூலை 20 ஆம் தேதி, நட்சத்திரத்தை மாற்றியுள்ளார். அதுவும் பூசம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார்.
இந்த பூசம் நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான். இந்த சனி பகவானும் சூரியனும் எதிரிகளாக கருதப்பட்டாலும், தந்தை மகனாவர். அதுவும் சூரியன் சனி பகவானின் நட்சத்திரத்திற்கு செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். இப்படி அதிர்ஷ்டம் பிரகாசிப்பதால், வெற்றிகளும், செல்வமும் குவியும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம ஏற்படும். ஊடகம், தகவல் தொடர்பு, மார்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். நல்ல நிதி ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கலாம். நீண்ட நாள் ஆசைகளும் நிறைவேறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தைக் காணக்கூடும். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் பெரிய அளவில் நன்மைகளைப் பெறுவீர்கள். வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கியமாக தைரியமும், வீரமும் அதிகரிக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. அதோடு புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். முதலீடுகளை செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. நீதிமன்ற விவகாரங்களில் வெற்றிகள் கிடைக்கும். வாழ்க்கையில் புதிய சாதனைகளைப் புரிவீர்கள். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். முக்கியமாக பெரிய ஜாக்பாட் அடிக்கும் வாய்ப்புள்ளது.