ஐசிசி தரவரிசையில் முன்னேற்றிய தசுன் மற்றும் நுவான் 

வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார, தனது டி20 வாழ்நாள் சிறந்த தரவரிசையைப் பதிவு செய்து மூன்று இடங்கள் முன்னேறி 13வது இடத்தை பிடித்துள்ளார். 

ஐசிசி தரவரிசையில் முன்னேற்றிய தசுன் மற்றும் நுவான் 
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஐசிசி தர வரிசையில் தசுன் மற்றும் நுவான் முன்னேற்றம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தரவரிசைப் புதுப்பிப்பில், தசுன் ஷானக மற்றும் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார ஆகியோர் டி20 தரவரிசையில் முன்னேறியுள்ளனர்.

வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார, தனது டி20 வாழ்நாள் சிறந்த தரவரிசையைப் பதிவு செய்து மூன்று இடங்கள் முன்னேறி 13வது இடத்தை பிடித்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

வனிந்து ஹசரங்க 6வது இடத்தில் தனது நிலையை தக்கவைத்து உள்ளார். மஹேஷ் தீக்ஷன, முன்பிருந்த 9வது இடத்திலிருந்து இரண்டு இடங்கள் சரிந்து 11வது இடத்திற்கு மாறியுள்ளார்.

முன்னாள் தலைவர் தசுன் ஷானக, துடுப்பாட்ட தரவரிசையில் மூன்று இடங்கள் முன்னேறி 75வது இடத்திற்கு சென்றுள்ளார். சகலதுறை வீரர் தரவரிசையிலும் ஒரு இடம் முன்னேறி 20வது இடத்தில் உள்ளார்.

இலங்கைக்கு எதிரான அண்மைய டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய பங்களாதேஷ் வீரர்களும் தரவரிசையில் முன்னேறி உள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

பந்துவீச்சாளராக முஸ்தபிசுர் ரஹ்மான், 17 இடங்கள் முன்னேறி 9வது இடத்தையும், மஹ்தி ஹசன், 9 இடங்கள் முன்னேறி 16வது இடத்தையும் பிடித்துள்ளனர். 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT