அமெரிக்க விசாவுக்கு புதிய நடைமுறை – சமூக வலைத்தள கணக்குகள் கண்காணிப்பு
டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் அமெரிக்கா சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், பல நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க H1B மற்றும் H4 விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களின் சமூக வலைத்தள கணக்குகள் முன்பை விட அதிகமாக கண்காணிக்கப்படும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் அமெரிக்கா சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், பல நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
புதிய நடைமுறையின்படி, H1B மற்றும் H4 விசா விண்ணப்பதாரர்கள் தங்களின் சமூக வலைத்தள கணக்குகளை 'பொது' (Public) அமைப்பில் வைத்திருக்க வேண்டும். இந்தக் கணக்குகள் பரிசோதனை மற்றும் கண்காணிப்புக்குட்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.