அமெரிக்க விசா கிடைக்காத விரக்தியில் பெண் மருத்துவர் உயிரிழப்பு
வீட்டிற்கு திரும்பிய பிறகு மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட ரோகிணி ஒரு கட்டத்தில் பதட்டமான நிலையில் காணப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த 38 வயது மருத்துவர் ரோகிணி, குடும்பத்துடன் ஐதராபாத்தில் வசித்து வந்தார். ரஷ்யாவில் மருத்துவப்படிப்பை முடித்த அவர், அமெரிக்காவில் மேல்படிப்பு மற்றும் பயிற்சி பெறும் நோக்கில் ஜே-1 விசாவிற்கு விண்ணப்பித்திருந்தார்.
இந்த கனவை நனவாக்க பல மாதங்களாக முயற்சி செய்து, தேவையான ஆவணங்கள் மற்றும் ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தார். ஆனால் விசா நிராகரிப்பு காரணமாக அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.
வீட்டிற்கு திரும்பிய பிறகு மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட ரோகிணி ஒரு கட்டத்தில் பதட்டமான நிலையில் காணப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பின்னர் அவர் கடுமையான உடல்நலக்குறைவிற்குள்ளாக, அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவர்கள் அவரை காப்பாற்ற முடியவில்லை.
இந்த சம்பவம் வெளிநாட்டில் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்குள் மன அழுத்தம் ஒரு முக்கிய பிரச்சினையாக இருப்பதை மீண்டும் நினைவூட்டுகிறது. பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.