பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் பெண் யூடியூபர் உட்பட 6 பேர் கைது!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானவைச் சேர்ந்த பெண் யூடியூபர் உட்பட 6 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மே 19, 2025 - 10:17
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் பெண் யூடியூபர் உட்பட 6 பேர் கைது!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானவைச் சேர்ந்த பெண் யூடியூபர் உட்பட 6 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அரியானா மாநிலத்தை சேர்ந்த பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா. இவருக்கு யூடியூபில் 3 லட்சத்து 77 ஆயிரம் ஃபாலோயர்கள் உள்ளயதுடன், இன்ஸ்டாகிராமிலும் அதிக ஃபாலோயர்கள் உள்ளனர்.

கடந்த 2023ம் ஆண்டு பாகிஸ்தான் சென்றுள்ள யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுக்கு, பாகிஸ்தான் உளவு அமைப்புடன் ஜோதிக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. 
அத்துடன், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றி வந்த இஷன் உர் ரஹ்மானுக்கும் ஜோதிக்கும் தொடர்பு ஏற்பட்டது.

இதையடுத்து, இந்தியா வந்த மல்ஹோத்ரா, அரியானா, பஞ்சாப்பில் உள்ள ராணுவ நிலைகள் தொடர்பான விவரங்களை உளவுபார்த்து பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு உளவுபார்த்த மல்ஹோத்ராவை அரியானா பொலிஸார் கைது செய்தனர். அவரின் நண்பர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!