மோசமான பந்துவீச்சு.. அஸ்வின் கேரியரையே காலியாக்கிய சுனில் நரைன்

துவக்க வீரர் பில் சால்ட் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த போதும் மற்றொரு துவக்க வீரர் சுனில் நரைன் மற்றும் ரகுவன்ஷி அதிரடி ஆட்டம் ஆடி ரன் குவித்தனர்.

Apr 17, 2024 - 08:28
மோசமான பந்துவீச்சு.. அஸ்வின் கேரியரையே காலியாக்கிய சுனில் நரைன்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. 

துவக்க வீரர் பில் சால்ட் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த போதும் மற்றொரு துவக்க வீரர் சுனில் நரைன் மற்றும் ரகுவன்ஷி அதிரடி ஆட்டம் ஆடி ரன் குவித்தனர்.

அதிலும் சுனில் நரைன், அஸ்வின் ஓவர்களை மட்டும் குறி வைத்து ரன் குவித்தார். இதை அடுத்து திணறிய அஸ்வின், பதற்றத்தில் நிறைய வைடுகளை வீசினார். 

4 ஓவர்களில் 49 ரன்கள் கொடுத்து இருந்தார் அஸ்வின். ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. ஐபிஎல் தொடரில் இதுவே அஸ்வினின் இரண்டாவது மிக மோசமான பந்துவீச்சாகும். 
முன்னதாக 2018இல் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக ஒரு விக்கெட் கூட வீழ்த்தாமல் 53 ரன்கள் கொடுத்து இருந்தார். அதுவே அவரது மோசமான ஐபிஎல் பந்துவீச்சாகும்.

2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அஸ்வினும் இடம் பெறக் கூடும் என ஒரு பேச்சு இருந்தது. 

ஆனால், அதற்கு அவர் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்தி இருக்க வேண்டும். ஆனால், இதுவரை அஸ்வின் சராசரியான பந்துவீச்சையே பதிவு செய்து இருக்கிறார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கடந்த போட்டியில் காயம் காரணமாக அஸ்வின் ஆடவில்லை. அப்போது அவருக்கு பதிலாக களமிறங்கிய தென்னாப்பிரிக்க சுழற் பந்துவீச்சாளர் கேஷவ் மகராஜ் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். 

இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவரை நீக்கி விட்டு, மீண்டும் அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டு இருந்தார். ஆனால், அஸ்வின் மோசமான பந்துவீச்சை பதிவு செய்து இருக்கிறார்.

அடுத்து வரும் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் கூட அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பது சந்தேகமே.  சுனில் நரைன் இந்தப் போட்டியில் தனது முதல் ஐபிஎல் சதம் அடித்து இருக்கின்றார்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.