விசா கட்டணத்தை அதிரடியாக உயர்த்திய இங்கிலாந்து - அதிர்ச்சியில் மாணவர்கள் 

இங்கிலாந்தில் சுற்றுலா மற்றும் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாக்களின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

விசா கட்டணத்தை அதிரடியாக உயர்த்திய இங்கிலாந்து - அதிர்ச்சியில் மாணவர்கள் 
ADVERTISEMENT
ADVERTISEMENT

இங்கிலாந்தில் சுற்றுலா மற்றும் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாக்களின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

விசா கட்டணம் மாற்றங்கள் குறித்த சட்டம் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

புதிய கட்டண கட்டமைப்பின் கீழ் ஆறு மாதங்களுக்கு குறைவான காலம் தங்குவதற்கான சுற்றுலா விசாவுக்கு கூடுதலாக 15 பவுண்டுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

மாணவர் ஒருவர் விசாவுக்கு கூடுதலாக 127 பவுண்டுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி இங்கிலாந்துக்கு வெளியே இருந்து மாணவர் ஒருவர் விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணம் 490 பவுண்டு களாகவும், சுற்றுலா விசா 115 பவுண்டுகளாகவும் கட்டணம் உயரும் என்று உள்துறை அலுவலகம் தெரிவித்து உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

பெரும்பாலான வேலை மற்றும் சுற்றுலா விசாக்கள் விலையில் 15 சதவீதமும், முன்னுரிமை விசா, படிப்பு விசா விலையில் 20 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

பெரும்பாலான விசா வகைகளுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தும். இந்த விசா கட்டண உயர்வு அக்டோபர் 4 முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT