16 வருசமா நடக்காத ஒன்னு... சேப்பாக்கத்தில் இன்று நடக்குமா?

IPL 2024 News in Tamil: 17ஆவது சீசனில் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஆர்சிபி அணியை எதிர்த்து, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்க உள்ளது. 

Mar 22, 2024 - 18:30
16 வருசமா நடக்காத ஒன்னு... சேப்பாக்கத்தில் இன்று நடக்குமா?
CSK vs RCB

IPL 2024 News in Tamil

17ஆவது சீசனில் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஆர்சிபி அணியை எதிர்த்து, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்க உள்ளது. 

2008-ல் தான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, கடைசியாக சேப்பாக்கத்தில் வெற்றியைப் பெற்றது. அதன்பிறகு 16 வருசமாக இங்கு வெற்றியைப் பெறாத, ஐபிஎல் அணியாக ஆர்சிபி இருக்கிறது.

ஆர்சிபி அணி, கடைசியாக சேப்பாக்கத்தில்  2019ஆம் ஆண்டில் விளையாடியதுடன், படுமோசமாக சொதப்பி, வெறும் 70 ரன்களுக்கு சுருண்டது. இதனால், இம்முறை ஆர்சிபி அணி மீது அதிக எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

சேப்பாக்கத்தில், ஆர்சிபி அணி 7 முறை விளையாடி 2008ல்  வெற்றியைப் பெற்ற நிலையில்,  2010, 2011, 2012, 2013, 2016, 2019 ஆகிய ஆண்டுகளில் இங்கு தோல்வியைதான் சந்தித்தது.

ஆரம்ப காலத்தில் இருந்தே சிஎஸ்கேவில் வலிமையான சுழற்பந்து வீச்சு அட்டாக் இருக்கிறது. இதனால்தான், எப்போதுமே, சிஎஸ்கே இங்கு ஆதிக்கம் செலுத்துகிறது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.