அமெரிக்க பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் சந்தேக நபர் பல்கலைக்கழக பொலிஸாரால் உடனடியாக கைது செய்யப்பட்டதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அமெரிக்காவின் கென்டக்கி மாநில பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார், மற்றொருவர் படுகாயமடைந்தார் என்று பிராங்க்ஃபோர்ட் நகரம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஆளுநர் ஆண்டி பெஷியர் மற்றும் நகரம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட இருவரும் கென்டக்கி மாநில பல்கலைக்கழக மாணவர்கள், ஆனால் சந்தேக நபர் நகரத்தை சேர்ந்நதவர் இல்லை.
வளாகத்தில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதிக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடந்ததாக பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் சந்தேக நபர் பல்கலைக்கழக பொலிஸாரால் உடனடியாக கைது செய்யப்பட்டதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
பெஷியர் மற்றும் பிராங்க்ஃபோர்ட் காவல்துறை உதவித் தலைவர் ஸ்காட் டிரேசி துப்பாக்கிச் சூட்டை ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் என்று விவரித்தனர்.
"இது ஒரு பெரிய அளவிலான துப்பாக்கிச் சூடு அல்லது தற்செயலான சம்பவம் அல்ல" என்று ஆளுநர் ஒரு வீடியோ அறிக்கையில் தெரிவித்தார்.