Googleஇன் 25ஆவது பிறந்தநாள் இன்று

ஒருசில விநாடிகளில் சந்தேகங்களைத் தீர்ப்பதிலும் உலகெங்கும் தகவல்களைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதிலும் Google தேடல் பெரும் பங்காற்றி வருகிறது.

செப்டெம்பர் 27, 2023 - 15:12
Googleஇன் 25ஆவது பிறந்தநாள் இன்று

Google தேடல் சேவை தொடங்கி இன்று 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

அதற்கென சிறப்பு Google Doodle சித்திரம் வெளியிடப்பட்டுள்ளது.

ஒருசில விநாடிகளில் சந்தேகங்களைத் தீர்ப்பதிலும் உலகெங்கும் தகவல்களைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதிலும் Google தேடல் பெரும் பங்காற்றி வருகிறது.

Google வரலாறு

1998ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி Google Inc எனும் நிறுவனம், செர்கேய் பிரின் (Sergey Brin), லேரி பேஜ் (Larry Page) ஆகிய இருவரால் தொடங்கப்பட்டது.

2001: Google Images

படங்களைத் தேடும் அம்சம் அறிமுகமானது.

2006: Google Translate

முதன்முறையாக அரபு மொழிக்கும் ஆங்கில மொழிக்கும் இடையிலான மொழிபெயர்ப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன. இன்று 100க்கும் அதிகமான மொழிகளுக்கு மொழிபெயர்ப்புச் சேவையை Google வழங்குகின்றது.

2008: Voice Search

குரல் வழி தேடல் அறிமுகம் செய்யப்பட்டது.

2020: Hum to Search

இசை மூலம் பாடலைத் தேடும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது.

2022: Multisearch

ஒரே நேரத்தில் எழுத்து, படங்கள் ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் தேடும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது.   

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!