இந்த ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் முதல் ஜாக்பாட்.. பணம் தொடர்பான கவலை வேண்டாம்!
குருபகவான் வருடத்திற்கு ஒரு முறை, ராகு மற்றும் கேது ஒன்றரை வருடத்திற்கு ஒருமுறை, சனிபகவான் இரண்டரை வருடத்திற்கு ஒருமுறையும் பெயர்ச்சி ஆவார்கள்.

குருபகவான் வருடத்திற்கு ஒரு முறை, ராகு மற்றும் கேது ஒன்றரை வருடத்திற்கு ஒருமுறை, சனிபகவான் இரண்டரை வருடத்திற்கு ஒருமுறையும் பெயர்ச்சி ஆவார்கள்.
இந்த ஆண்டு இந்த 4 கிரகங்களும் பெயர்ச்சி ஆகவுள்ளதுடன், மார்ச் 29ஆம் தேதி சனி பகவான் மீன் ராசிக்கு பெயர்ச்சி ஆகி உள்ளார். தொடர்ந்து மே 14ஆம் தேதி குரு பகவான் மிதுன ராசிக்கும் மே 18ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சியும் நடைபெற உள்ளது.
இது 12 ராசிகளிலும் சில தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், 3 ராசிக்காரர்களுக்கு நல்ல மாதிரியான தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது.
விருச்சிக ராசி
விருச்சிக ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. திடீர் நிதி ஆதாயம் மற்றும் வெளியில் இருக்கும் பணம் உங்களை தேடி வர வாய்ப்பு உள்ளது.
அரசு வேலைகளில் இருப்பவர்கள் பெரிய பதவிக்கு செல்லலாம். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்த காலத்தில் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஒட்டுமொத்தமாக விருச்சிக ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும்.
கும்ப ராசி
சனி பகவானின் ராசி மாற்றத்தால், கும்ப ராசியில் சில நல்ல தக்கங்கள் ஏற்படும். இவர்கள் நிதி நன்மைகள் பெறலாம். வெளியே சிக்கிய பணத்தை மீட்டெடுக்க முடியும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
இவர்கள் வழிபாடு மற்றும் பக்தியில் ஆர்வம் காட்டுவார்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு நன்மைகள் ஏற்படும். துணைவியாருடனான உறவு மகிழ்ச்சியாக இருக்கும். மேலும் இந்த ராசிக்காரர்கள் நிலம் மற்றும் கட்டிடம் வாங்க வாய்ப்புள்ளது.
மீன ராசி
இந்த காலத்தில், மீன ராசிக்காரர்களுக்கு எப்போதும் சுக்கிர பகவானின் ஆருள் கிடைக்கும். உடல் நிலையில் பிரச்சனைகள் ஏதும் வராது. இந்த ராசிக்காரர்கள் தொழில் செய்பவர்களாக இருந்தால் அதில் ஒரு புதிய பரிமாணத்தை பெறலாம்.
வியாபாரத்தில் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் அடைய காய்கறிகள் மற்றும் பழங்களை தானம் செய்ய வேண்டும். மகிழ்ச்சி அதிகரிக்கும். சில பெரிய ஆசைகள் நிறைவேறும்.