முருங்கைக்காய் விலை திடீரென கிடுகிடு உயர்வு... எவ்வளவு தெரியுமா?

இலங்கையில் உள்ள எந்தவொரு பொருளாதார மத்திய நிலையத்திலும் நேற்று முருங்கை விற்பனையாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Feb 9, 2024 - 10:54
முருங்கைக்காய் விலை திடீரென கிடுகிடு உயர்வு... எவ்வளவு தெரியுமா?

நாரஹேன்பிட்டி விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று (08) ஒரு கிலோகிராம் முருங்கைக்காயின் சில்லறை விலை 2,000 ரூபாயாக பதிவாகியுள்ளது.

அத்துடன், ஒரு கிலோகிராம் முருங்கைக்காய் 1,980 ரூபாய் என்ற மொத்த விலைக்கு விற்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கையில் உள்ள எந்தவொரு பொருளாதார மத்திய நிலையத்திலும் நேற்று முருங்கை விற்பனையாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் 2,000 ரூபாயக்கும் அதிகமாக விற்கப்பட்ட ஒரு கிலோகிராம் கரட்டின் மொத்த விலை 650 ரூபாயாக குறைவடைந்துள்ளது.

இதனை,  நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 


நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...