நாட்டில் அவசரகால நிலை பிரகடனம் – அதிவிசேட வர்த்தமானி வெளியானது
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பரவலான பேரழிவை எதிர்கொள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவசரகால நிலையை அறிவித்துள்ளார். தேசிய அளவில் இறப்பு எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளதுடன், மேலும் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பரவலான பேரழிவை எதிர்கொள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவசரகால நிலையை அறிவித்துள்ளார். தேசிய அளவில் இறப்பு எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளதுடன், மேலும் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
சூறாவளி காரணமாக ஏற்பட்ட கடுமையான வெள்ளம், நிலச்சரிவுகள் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட பல மாவட்டங்களில் குறைந்தது 130 பேர் காணாமல் போயுள்ளனர்.
கனமழை, சேதமடைந்த வீதிகள் மற்றும் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு சேவைகளில் இடையூறுகள் இருந்தபோதிலும் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நாட்டில், அவசரகால நிலைமை அறிவிக்கப்பட்டுள்ளமையானது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு நிவாரணம், மீட்பு மற்றும் மறுவாழ்வு முயற்சிகளை விரைவுபடுத்த சிறப்பு அதிகாரம் கிடைத்துள்ளது.
இது அத்தியாவசிய சேவைகளை அணிதிரட்டவும், அவசர நிதியை ஒதுக்கவும், உயிர் மற்றும் சொத்துக்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளைச் செயல்படுத்தவும் உதவும்.
மத்திய, சபரகமுவ, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் டிட்வா சூறாவளி பரவலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது, ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். முக்கியமான உள்கட்டமைப்புக்கள் சேதமடைந்துள்ளன.
பேரழிவால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களை சென்றடைய முப்படைகள், பொலிஸார், அனர்த்த முகாமைத்து நிலைய குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் 24 மணி நேர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
வெள்ள நீர் குறைந்து, பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு சென்று பார்க்கும்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்னர்.