லிட்ரோ எரிவாயுவின் புதிய விலை அறிவிப்பு
லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயு விலைகள் இன்று (5) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறைக்கப்பட்டுள்ளன.

லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயு விலைகள் இன்று (5) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, 12.5 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 201 ரூபாயினால் குறைப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 2,409 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறே, 5 கிலோகிராம் எரிவாயு கொள்கலன் விலை 80 ரூபாயினாலும், 2.5 கிலோகிராம் எரிவாயு கொள்கலன் விலை 38 ரூபாயினாலும் குறைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 5 கிலோகிராம் எரிவாயு கொள்கலனின் புதிய விலை 1770 ரூபாயாகவும், 2.5 கிலோகிராம் எரிவாயு கொள்கலனின் புதிய விலை 822 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ள லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.