2025ஆம் ஆண்டின் சொல் 'Parasocial' : Cambridge அகராதி அறிவிப்பு
நட்சத்திரங்கள், சமூக ஊடகப் பிரபலங்கள் ஆகியோரைத் தெரியவில்லை என்றாலும் அவர்களுடன் ஏதோ ஒரு நெருக்கம் இருப்பதுபோல் அதிகமானோர் உணர்வதை அது குறிக்கிறது.
2025ஆம் ஆண்டின் சொல் 'Parasocial'என Cambridge அகராதி அறிவித்துள்ளது.
நேரில் சந்தித்திடாத, பேசிப் பழக்கமே இல்லாத ஒருவருடன் நெருக்கமான உறவு இருப்பதுபோல் உணர்ந்தது உண்டா? அந்த உணர்வுக்குப் பெயர் தான் "parasocial" ஆகும்.
நட்சத்திரங்கள், சமூக ஊடகப் பிரபலங்கள் ஆகியோரைத் தெரியவில்லை என்றாலும் அவர்களுடன் ஏதோ ஒரு நெருக்கம் இருப்பதுபோல் அதிகமானோர் உணர்வதை அது குறிக்கிறது.
செயற்கை நுண்ணறிவுத் தானியக்க உரையாடல் வசதியுடன் அதிகமானோர் கொண்டிருக்கும் உறவையும் அது குறிக்கிறது.
எனினும், "Parasocial" என்பது புதிய சொல் அல்ல. அது 1956ஆம் ஆண்டு பிறந்தது.
அக்காலத்தில் தொலைக்காட்சிப் பிரபலங்களை மக்கள் தங்களது குடும்பத்தார் அல்லது நெருங்கிய நண்பர்கள்போல் பார்ப்பதைக் கவனித்த இரு அமெரிக்க சமூகவியலாளர்கள், அந்தச் சொல்லை உருவாக்கினர்.
Cambridge இணைய அகராதியில் கடந்த 12 மாதங்களில் சுமார் 6,200 புதிய சொற்கள் சேர்க்கப்பட்டன.
"Skibidi", "delulu", "tradwife" ஆகிய சொற்களும் அதில் அடங்கும்.
நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கக்கூடியவை என்று நம்பப்படும் சொற்கள் மட்டுமே அகராதியில் சேர்க்கப்படுவதாக அகராதி ஆசிரியர் ஒருவர் கூறினார்.