15ஆம் திகதி முதல் இலங்கையர்களுக்கு விசா கட்டாயம் - தாய்லாந்து அரசு அதிரடி அறிவிப்பு!

இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான தாய்லாந்து விசா இல்லா அனுமதி, செப்டம்பர் 15 முதல் இரத்துச் செய்யப்பட்டுள்ளதுடன், பயணிகள் முன்கூட்டியே இணையவழியில் விசா பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
15ஆம் திகதி முதல் இலங்கையர்களுக்கு விசா கட்டாயம் - தாய்லாந்து அரசு அதிரடி அறிவிப்பு!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள், தாய்லாந்துக்குள் விசா இன்றி நுழைவதற்கான நடைமுறை எதிர்வரும் 15ஆம் திகதியுடன் முடிவுக்கு வருவதாக தாய்லாந்து அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 

அந்நாட்டு அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திருத்தப்பட்ட புதிய விசா விதிகளின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

திருத்தப்பட்ட விசா விலக்கு மற்றும் வருகைக்கான விசா (Visa on Arrival) தொடர்பான புதிய ஒழுங்குவிதிகள் கடந்த ஓகஸ்ட் 31ஆம் திகதி அந்நாட்டு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் புதிய நடைமுறைகள் அனைத்தும் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் முழுமையாக அமுலுக்கு வரவுள்ளதாக தாய்லாந்து வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

கடந்த மே மாதம் தாய்லாந்து அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட மீளாய்வு அறிக்கையைத் தொடர்ந்தே இந்த அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. 

இதன்படி, முன்னதாக நடைமுறையில் இருந்த 60 நாட்கள் தங்கியிருப்பதற்கான விசா விலக்குத் திட்டம் இரத்துச் செய்யப்பட்டு, குறுகிய கால விசா இல்லா அனுமதி வழங்கப்படும் நாடுகளின் பட்டியல் முழுமையாக திருத்தியமைக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு, சுற்றுலா மற்றும் பொருளாதார நலன்கள், இருதரப்பு இராஜதந்திர உறவுகள் மற்றும் தாய்லாந்தின் இணையவழி விசா (e-Visa) முறைமை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்த மாற்றங்களின்படி, எதிர்வரும் 15ஆம் திகதிக்குப் பின்னர் தாய்லாந்திற்கு பயணம் செய்யத் திட்டமிடும் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள், தமது பயணத்துக்கு முன்னதாகவே உரிய விசாவைப் பெற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இலங்கையர்கள் தாய்லாந்தின் உத்தியோகபூர்வ இணையவழி e-Visa முறைமையின் ஊடாக விசாக்களுக்கு விண்ணப்பிக்க முடியும். கொழும்பில் உள்ள தாய்லாந்து தூதரகம் விசா விண்ணப்பங்களை நேரடியாகப் பொறுப்பேற்பதில்லை என்பதுடன், அனைத்து விண்ணப்பங்களும் அவற்றுக்கான கட்டணங்களும் இணையவழியிலேயே செலுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, செப்டம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் தற்போதைய விசா இல்லா நடைமுறையின் கீழ் தாய்லாந்துக்குள் பிரவேசிக்கும் இலங்கையர்கள், தமக்கு ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட காலம் வரை அந்நாட்டில் தொடர்ந்து தங்கியிருக்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தாய்லாந்து வெளிவிவகார அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது. 

குறித்த புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கொழும்பிலுள்ள தாய்லாந்து தூதரகம் செப்டம்பர் 4ஆம் திகதி தனது புதிய விசா வழிகாட்டல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -