உள்நாட்டு டின் மீன்களுக்கு புதிய அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்: வர்த்தமானி வெளியீடு
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் டின் மீன்களுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து நுகர்வோர் விவகார அதிகாரசபையால் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் டின் மீன்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
2003ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் 20(5) ஆம் பிரிவின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
இதற்கமைய, உள்நாட்டு உற்பத்தியாளர்கள், பொதியிடுபவர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தகர்கள் எவரும் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள குறித்த டின் மீன் வகைகளை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யவோ, விற்பனைக்காக முன்வைக்கவோ அல்லது காட்சிப்படுத்தவோ முடியாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய விலைக்கட்டுப்பாட்டு உத்தரவு, இன்று (05) முதல் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -