முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு இனி இது கட்டாயம் - விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

மேலதிக விபரங்களை 0112864542 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு இனி இது கட்டாயம் - விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் மேல் மாகாணத்தை சேர்ந்த அனைத்து முச்சக்கர வண்டிகளும் மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையில் பதிவு செய்து அனுமதிப்பத்திரம் பெறுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பிரசன்ன சஞ்சீவ இதனை தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேலதிக விபரங்களை 0112864542 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதன்போமு, போக்குவரத்து அதிகாரசபையினால் ஸ்தாபிக்கப்பட்ட முச்சக்கரவண்டி பணியகம் தொடர்பான கையேடு ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இவ்வாறு பதிவு செய்வதற்கு 3000 ரூபாய் கட்டணம் அறவிடப்படும் என்றும், முச்சக்கரவண்டி பதிவுக்கு 3000 ரூபாயும், வருடாந்த பயணிகள் போக்குவரத்து சேவை அனுமதிப்பத்திரத்திற்கு 1000 ரூபாயும், சாரதி பதிவுக்கு 1500 ரூபாயும் அறவிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேல் மாகாணத்தில் உள்ள பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் 8 பிராந்திய அலுவலகங்களில் முச்சக்கரவண்டி பதிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை www.wptaxi.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மேல் மாகாணத்தில் 354,000 முச்சக்கர வண்டிகள் இருப்பதாகவும் அதில் சுமார் 29 ஆயிரம் முச்சக்கர வண்டிகள் தற்போது மேல் மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முச்சக்கரவண்டி பதிவுகளுக்கு ஜூன் 30 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்படும் எனவும், ஜூலை 1ஆம் திகதி முதல் பதிவு செய்யாத முச்சக்கரவண்டிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.  

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT