ஹர்ஷன இராஜினாமா... வெற்றிடமான நாடாளுமன்ற ஆசனம்... புதியவர் யார்?

ஹர்ஷன சூரியப்பெருமவின் ராஜினாமா ஜூன் 20, 2025 முதல் அமலுக்கு வரும் என்றும் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

ஹர்ஷன இராஜினாமா... வெற்றிடமான நாடாளுமன்ற ஆசனம்... புதியவர் யார்?
ADVERTISEMENT
ADVERTISEMENT

தேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான ஹர்ஷன சூரியப்பெரும, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீர, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

ஹர்ஷன சூரியப்பெருமவின் ராஜினாமா ஜூன் 20, 2025 முதல் அமலுக்கு வரும் என்றும் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அதன்படி, 1981 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் பிரிவு 64(5) இன் படி, பத்தாவது நாடாளுமன்றத்தில் ஹர்ஷன சூரியப்பெருமவின் ஆசனம் காலியாக உள்ளதாக செயலாளர் நாயகம் தேர்தல் ஆணையத்தின் தலைவருக்கு அறிவித்துள்ளார்

இதேவேளை, வெற்றிடமாக நாடாளுமன்ற ஆசனத்துக்கு யார் நியமிக்கப்படுவார் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT