எரிபொருள் விநியோகத்தில் QR முறை நீக்கப்படுமா? தொடர்ந்தும் ஆராயப்படுகிறது

நாட்டில் தற்போதைய எரிபொருள் விநியோக நிலை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே, அவர் இந்த தகவலை தெரிவித்தார்.

எரிபொருள் விநியோகத்தில் QR முறை நீக்கப்படுமா? தொடர்ந்தும் ஆராயப்படுகிறது
ADVERTISEMENT
ADVERTISEMENT

எரிபொருள் விநியோகத்தின் போது QR குறியீட்டு முறையை பயன்படுத்துவதை நீக்குவது தொடர்பில் தொடர்ந்து ஆராயப்பட்டு வருவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருணா இதனைத் தெரிவித்தார். நாட்டில் தற்போதைய எரிபொருள் விநியோக நிலை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே, அவர் இந்த தகவலை தெரிவித்தார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேலும், உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்ந்த வேகத்துடன் ஒப்பிடுகையில், அதன் விலை குறைவடையும் செயல்முறை அதே அளவிலான வேகத்தில் நடைபெறுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச சந்தை மாற்றங்கள் எரிபொருள் விலை நிர்ணயத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போதைய நிலையில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு மக்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் அல்லது தடைகளும் இல்லை என்றும் டி. ஜே. ராஜகருணா தெரிவித்தார். நாட்டில் எரிபொருள் விநியோகம் வழமையான முறையில் நடைபெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT