TIN இலக்கம் தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தாங்கள் ஏமாற்றப்படுவதை உணராதவர்கள், மேற்கொண்டு விசாரிக்காமல் இந்த இரகசிய எண்ணை அவர்களிடம் கொடுத்து விடுவார்கள்.

Feb 8, 2024 - 12:57
TIN இலக்கம் தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட TIN இலக்கத்துடன் தொடர்புடைய வங்கிச் சேவை எனக் கூறி மக்களை ஏமாற்றும் நபர்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான மோசடி கும்பலிடம் சிக்கி பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்தவர்கள் தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக குருநாகல் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

அரச வங்கியின் பணியாளர்கள் என அழைக்கும் கும்பல் TIN இலக்கம் தொடர்பாக வங்கியில் கணக்கை எவ்வாறு பராமரிப்பது என்று தெரிவிக்கிறார்கள், பின்னர் கணக்கை அமைக்க வேண்டிய வங்கி வாடிக்கையாளரின் பண பரிமாற்ற கடவுச்சொல்லை (OTP) கேட்கிறார்கள்.

தாங்கள் ஏமாற்றப்படுவதை உணராதவர்கள், மேற்கொண்டு விசாரிக்காமல் இந்த இரகசிய எண்ணை அவர்களிடம் கொடுத்து விடுவார்கள்.

இரகசிய இலக்கத்தை பெற்றுக்கொள்ளும் மோசடி கும்பல் தாம் தொடர்பு கொண்ட நபரின் வங்கிக் கணக்கிற்குள் நுழைந்து லட்சக்கணக்கில் பணத்தை எடுத்துச் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளதாக குருநாகல் மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தமது வாடிக்கையாளர்களை ஏமாற்றி இந்த மோசடி கும்பல் நேற்று குருநாகல் நகரிலுள்ள பிரதான கல்வி நிறுவனமொன்றில் பணியாற்றும் நபரின் கணக்கில் 2 லட்சத்து 60000 ரூபாயை மோசடியாக பெற்றுக்கொண்டுள்ளனர். 

கடந்த வாரம் வேறொருவரின் கணக்கிலிருந்து 10 இலட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளதாக அரச வங்கியொன்றின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அவ்வாறு அலைபேசியில் அழைத்து தனிப்பட்ட தகவல்களைக் கேட்கும் மோசடியாளர்களிடம் சிக்க வேண்டாம் என மக்களுக்குத் தெரிவிக்கும் பிரதிப் பொலிஸ் மா அதிபர், இது தொடர்பில் குருநாகல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்கள் ஊடாக மக்களுக்குத் தெரியப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.


நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...