நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று (06) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை
ADVERTISEMENT
ADVERTISEMENT

நாட்டின் பல பகுதிகளில் இன்று (06) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக் கூடும்.

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கு மேல் மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள் மற்றும் வடமத்திய, வடமேற்கு, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அவ்வப்போது (30-40) கிலோமீற்றரில் பலத்த காற்று வீசக்கூடும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த நிலையில் மத்திய, சபரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை நிலவும் எனவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT