சி.வி.கே. மற்றும் சிறிதரனின் கரங்களைப் பற்றி இந்திய துணை ஜனாதிபதி கூறிய முக்கிய செய்தி

வட,கிழக்கைப் பிரதிநிதித்துவம் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணனுக்கும் இடையிலான சந்திப்பு 19-04-2026 அன்று தாஜ் சமுத்திரா விடுதியில் நேற்றையதினம் நடைபெற்றிருந்தது.
சி.வி.கே. மற்றும் சிறிதரனின் கரங்களைப் பற்றி இந்திய துணை ஜனாதிபதி கூறிய முக்கிய செய்தி
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

தமிழ்த் தலைவர்களிடையே ஒற்றுமை மிகவும் அவசியம் என்று இந்திய துணை ஜனாதிபத சி.பி.இராதாகிருஷ்ணன் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் அக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஆகியோரின் கரங்களைப் பற்றியவாறு குறிப்பிட்டுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

வட,கிழக்கைப் பிரதிநிதித்துவம் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணனுக்கும் இடையிலான சந்திப்பு 19-04-2026 அன்று தாஜ் சமுத்திரா விடுதியில் நேற்றையதினம் நடைபெற்றிருந்தது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தலைவர்கள் தங்களது அறிமுகத்துடன் சமகால நிலைமைகள் மற்றும் இந்தியாவிடத்திலான கோரிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்களை வெளிப்படுத்தினர். அத்துடன் துணை ஜனாதிபதியும் இந்தியாவின் ஒத்துழைப்பக்கள் எதிர்கல ஆதரவுகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில் சந்திப்பு நிறைவடைந்து உத்தியோக பூர்வமான புகைப்படம் எடுக்கப்பதற்கு தயரான போது தலைவர்கள் ஒவ்வொருவராக துணை ஜனாதிபதியின் அருகில் சென்று விடைபெறும் கருத்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தனர். 

அச்சமயத்தில் சி.வி.கே.சிவஞானம், மற்றும் சிஞானம் சிறிதரன் எம்.பி. ஆகியோர் அருகில் சென்றபோது இருவரது கரங்களையும் சமநேரத்தில் பற்றி இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் தமிழர்களுக்காக அதிகமான அரசியல் கட்சிகள் காணப்படுகின்றன. எனினும் தமிழ்த் தலைவர்களிடையே ஒற்றுமையானது மிகவும் அவசியமானது. நீங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதன்போது, சிறிதரன் மற்றும் சி.வி.கே. ஆகியோருர் புன்னகையுடன் தலையசைத்து ஆமோதித்து நன்றி கூறி விடைபெற்றுக்கொண்டுள்ளனர்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -