ஞானசார தேரரை காவி உடையுடன் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கோரி உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு
சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வணக்கத்துக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரரை ஏனைய வழக்குகளுக்காக நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தும்போது, அவரை காவி உடையை அணிவித்து முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கோரி, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த அடிப்படை உரிமை மீறல் மனு, ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியான சாந்த ஜயதிலக்க என்பவரால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனுவில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், நீதி அமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.