மலையகத்துக்கான தனிப் பல்கலைக்கழகம் விரைவில்

மலையகத்துக்கான தனிப் பல்கலைக்கழகம் விரைவில் அமைக்கப்படும். இதனை கூடியவிரைவில் செய்துமுடிக்க வேண்டும் என்பதில் அமைச்சர் ஜீவன் தொண்டான் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றார்.

மலையகத்துக்கான தனிப் பல்கலைக்கழகம் விரைவில்
ADVERTISEMENT
ADVERTISEMENT

"மலையகத்துக்கான தனிப் பல்கலைக்கழகம் விரைவில் அமைக்கப்படும். இதனை கூடியவிரைவில் செய்துமுடிக்க வேண்டும் என்பதில் அமைச்சர் ஜீவன் தொண்டான் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றார். இது விடயத்தில் அரசும் உறுதியாக உள்ளது" - என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். 

மலையக இளைஞர், யுவதிகளின் நீண்ட நாள் எதிர்ப்பார்ப்பாக இருந்த மலையகத்திற்கான தனி பல்கலைக்கழகம் நிறுவுவதற்கான இறுதிக்கட்ட வேலைத்திட்டங்களுக்கான கலந்துரையாடல் ஒன்று அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அழைப்பின் பேரில் கொட்டகலைக்கு வருகை தந்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் இடம்பெற்றது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதில் கலந்துக் கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறியவை வருமாறு, 

" மலையகத்துக்கான பல்கலைக்கழகத்தின் அவசியத்துவம் பற்றி பலரும் வலியுறுத்தி வந்தனர். இது விடயத்தில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் துரிதமாக செயற்பட்டார். ஜனாதிபதியுடன் பேசி அனுமதிபெற்று, எனக்கும் அறிவித்தார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

நிதியை திரட்டுவதற்கான வேலைத்திட்டத்தை அமைச்சர் (ஜீவன்) தயாரித்துள்ளார். அரச நிதியை பயன்படுத்துவதற்கு முன்னர் அதனை பெற முடியும். நிதி வழிமுறைகள் தொடர்பான அறிவிப்பை அமைச்சர் வெளியிடுவார். 

பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கு கொட்டகலை ஆசிரியர் கலாசாலை வளாகம் சிறந்த இடம். சூழவுள்ள பகுதியும் அரச காணியாகும். எனவே, எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைக்கு காணி பெறுவதிலும் சிக்கல் இருக்காது, முதலில் பல்கலைக்கழகத்தை நிறுவிவிட்டு  -  பின்னர் பீடங்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ளலாம்.  

நுவரெலியாவில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் மாணவர்கள் ஏனைய பகுதிகளுக்கே செல்கின்றனர். இங்கு பல்கலைக்கழகம் அமைந்தால் அதன்மூலம் அவர்கள் பயன்பெறுவார்கள். இன்று நான் கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்டேன். இது தொடர்பில் கொழும்பில் கலந்துரையாடி இறுதி முடிவெடுக்கப்படும் என்றார்.

(க.கிஷாந்தன்)

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT