புறக்கோட்டை தீ விபத்தில் காயமடைந்த யுவதி உயிரிழப்பு

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புறக்கோட்டை தீ விபத்தில் காயமடைந்த யுவதி உயிரிழப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

கொழும்பு – புறக்கோட்டை 2ஆம் குறுக்கு தெரு பகுதியிலுள்ள ஆடையகமொன்றில் 27ம் திகதி ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த யுவதி உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த தீ விபத்தில் காயமடைந்த  11 பெண்கள் உள்ளிட்ட 20துக்கும் மேற்பட்டோர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், காயமடைந்தவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இந்த சம்பவத்தில் காயமடைந்த வட்டகொட கீழ்ப் பிரிவைச் சேர்ந்த யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த தீ விபத்து தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்தும் முன்னெடுத்துள்ளனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT