வாகனம் கொள்வனவு செய்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வாகனம் கொள்வனவு செய்து தங்கள் பெயரில் பதிவு செய்யாமல் பயன்படுத்தும் வாகன உரிமையாளர்களுக்கு  அபராதம்

வாகனம் கொள்வனவு செய்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ADVERTISEMENT
ADVERTISEMENT

வாகனம் கொள்வனவு செய்யும் பலர் திறந்த காகித வாகன பரிமாற்றங்களைச் செய்யவில்லை என்பதை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

எனவே, வாகனம் கொள்வனவு செய்து தங்கள் பெயரில் பதிவு செய்யாமல் பயன்படுத்தும் வாகன உரிமையாளர்களுக்கு  அபராதம் விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

கொள்வனவு செய்த நாளில் இருந்து 14 நாட்களின் பின்னர் அபராதம் விதிக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நிஷாந்த அனுருத்த தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரில் பொருத்தப்பட்டுள்ள கமரா கட்டமைப்பு மூலம் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளை இன்று முதல் அடையாளம் காணவுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சில வாகனங்களின் உண்மையான பதிவு உரிமையாளரை பலரது திறந்த காகித மூலம் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

வேறு ஒருவரிடமிருந்து வாகனம் வாங்கினால் அதை உடனடியாக அவரது பெயரில் பதிவு செய்ய வேண்டும் எனவும் மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நிஷாந்த அனுருத்த குறிப்பிட்டுள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT