சிக்சர் மழை பொழிந்து இந்திய அணியை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்க தரப்பில் ஜெரால்ட் கோட்ஸி 3 விக்கெட்டுகளையும், ஐடன் மார்க்ரம் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனால் இந்திய அணியின் இன்னிங்ஸ் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. மேலும் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி தென் ஆப்பிரிக்க அணிக்கு 15 ஓவர்களில் 152 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ரீஸா ஹென்றிக்ஸ் - மேத்யூ ப்ரீட்ஸ்கீ இணை தொடக்கம் கொடுத்தனர். இன்னிங்ஸின் முதல் ஓவரிலிருந்தே பவுண்டரிகளை விளாசிய இந்த இணை முதல் ஓவரில் 18 ரன்களையும், இரண்டாவது ஓவரில் 20 ரன்களையும் விளாசி மிரட்டினர்.
அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த ப்ரீட்ஸ்கீ 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஐடன் மார்க்ரமும் தனது பங்கிற்கு 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 30 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அதேசமயம் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ரீஸா ஹென்றிஸ் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 8 பவுண்டரி, ஒரு சிக்சர் என 49 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட, அடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் ஹென்ரிச் கிளாசென் 7 ரன்களோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டி ஏமாற்றமளித்தார்.
அதன்பின் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் டேவிட் மில்லரும் 17 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, தென் ஆப்பிரிக்க அணி வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 12 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
அப்போது களத்தில் இருந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் - பெஹ்லுக்வாயோ இணை அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 13.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் டி20 தொடரிலும் முன்னிலை பெற்றுள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.