அரச ஊழியர்களின் சம்பள உயர்வு - மற்றுமொரு சுற்றறிக்கை வெளியானது

வரவு -  செலவுத் திட்டத்தில் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை 10 ஆயிரம் ரூபாயினால் அதிகரிக்க முன்மொழியப்பட்டது.

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு - மற்றுமொரு சுற்றறிக்கை வெளியானது
ADVERTISEMENT
ADVERTISEMENT

அரச ஊழியர்களுக்கு இந்த வருடத்தில் மார்ச் மாதம் வரையான ஐயாயிரம் ரூபாய் வாழ்வாதார கொடுப்பனவு  நிலுவை தொகை அடுத்த வருடம் (2025) ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன அனைத்து அரச நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை மூலம் இதனை தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

வரவு -  செலவுத் திட்டத்தில் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை 10 ஆயிரம் ரூபாயினால் அதிகரிக்க முன்மொழியப்பட்டது.

அத்துடன், மார்ச் வரையில் அந்த தொகையில் ஐம்பது சதவீதத்தை வழங்குவதற்கு பின்னர் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, இம்மாதம் முதல் மார்ச் வரை தலா ஐந்தாயிரம் ரூபாயும், மீதமுள்ள தொகை அடுத்த ஆண்டும் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

தற்போதைய வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவான 7800 ரூபாயுடன் ஐயாயிரம் ரூபாயை சேர்த்து எதிர்வரும் மார்ச் மாதம் வரை பன்னிரண்டாயிரத்து எண்ணூறு ரூபாயை (12800) செலுத்தபடவுள்ளது.

அத்துடன், ஏப்ரல் மாதம் முதல் கொடுப்பனவை பதினேழாயிரத்து எண்ணூறு ரூபாயாக அதிகரிக்குமாறும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT