இரவு வேளையில் பல்கலைக்கழக விடுதிகளை சோதனைக்கு உட்படுத்த தீர்மானம்

இரவு வேளைகளில் பல்கலைக்கழக விடுதிகளை சோதனைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இரவு வேளையில் பல்கலைக்கழக விடுதிகளை சோதனைக்கு உட்படுத்த தீர்மானம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

இரவு வேளைகளில் பல்கலைக்கழக விடுதிகளை சோதனைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக விடுதிகளில் இடம்பெறும் பகிடிவதைகளை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர், கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

விடுதிகளில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 05 மணி வரையான காலப்பகுதியில் அதிகளவிலான பகிடிவதைகள் இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சோதனை நடவடிக்கையில், பல்கலைக்கழக ஒழுக்காற்று அதிகாரிகள் மற்றும் மாணவ ஆலோசகர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு தேவையான வசதிகள் வழங்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் இதன்போது தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

பல்கலைக்கழகங்களில் பகிடிவதையைத் தடுப்பதற்கான தேசிய குழுவ நியமிக்கப்பட்டுள்ளதுடன். பகிடிவதை சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகளை மேற்கொள்வதற்காக WhatsApp இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதற்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT