அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு

குறித்த அமைச்சில் 495,000 ஊழியர்கள் பணிபுரிவதாக மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்தார்.

அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

8,400 அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிலேயே அதிக எண்ணிக்கையிலான அரச ஊழியர்கள் பணியாற்றுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அதற்கமைய, குறித்த அமைச்சில் 495,000 ஊழியர்கள் பணிபுரிவதாக மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர, ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  தெரிவித்தார்.

அமைச்சு மற்றும் அதன் நிறுவனங்களில் 18 முதல் 20 வருடங்களாக நிரந்தர நியமனம் பெறாத ஊழியர்கள் இருப்பதாகவும், அவர்கள் நிரந்தர நியமனம் செய்யப்பட உள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT